கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து


கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 15 July 2022 12:15 AM IST (Updated: 15 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி (வயது 33). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வடிவேல் (35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது.வடிவேல் வெல்டிங் பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அமராவதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் வடிவேல் தகராறு செய்து வந்தார்.

கத்திக்குத்து

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமராவதியின் வீட்டிற்கு சென்ற வடிவேல் அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த வடிவேல் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அமராவதி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story