கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழை நீர் - மக்கள் கடும் அவதி


கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழை நீர் - மக்கள் கடும் அவதி
x

சென்னையில் ஒருசில பகுதிகளில் மட்டும்தான் வெள்ளம் வடியாத நிலை உள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3, 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் மழைநீர் பெரும்பாலும் வடிந்துவிட்டது. இன்னும் ஒருசில பகுதிகளில் மட்டும்தான் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. அந்த பகுதிகளிலும் தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது.

இந்த நிலையில், கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் பகுதியில் ஒரு வாரமாக மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரை 5 மோட்டார் பம்புகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.


Next Story
  • chat