அரசநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அரசநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அரசநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் முகாம் பகுதியில் அமைந்துள்ளது அரசநாயகி அம்மன் கோவில். இங்கு அரசநாயகி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர்.கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த நடைபெற்றது. இதனையொட்டி தீபாராதனைகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் முடிந்து தென்காசி மாவட்டம் நெட்டூர் முப்புடாதி அம்மன் கோவில் ஸ்தானிகர் ராமநாத குருக்கள் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க அரசநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அரசநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பூஜைகளை கோவில் பூஜகர் கலையரசன் நடத்தினார். விழாவில் சென்னை, பெங்களூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வள்ளல் டாக்டர் களஞ்சியத்தேவர் குடும்பத்தினர் சார்பில் அன்னதான ஏற்பாடுகளை பொறியாளர் ஆர்.கே.வெங்கட்ராமன் செய்துகொடுத்தார்.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story