கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி


கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி
x

விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பிக்கனபள்ளி வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் குருபரபள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த யானைகள், பின்னர் பைனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டன.

இதையடுத்து கடந்த 6 நாட்களாக வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று 3 யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


Next Story