குடிகாத்த மலையாள சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


குடிகாத்த மலையாள சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x

குடிகாத்த மலையாள சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை கிராமத்தில் குடிகாத்த மலையாள சாத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அய்யனார், விநாயகர், மலையாள பெரிய கருப்பு, மாந்துறை பெரிய கருப்பு, லாட முனீஸ்வரர், சப்பாணி கருப்பு, மதுரை வீரன், சன்னாசி கருப்பு, மாமுண்டி கருப்பு, சங்கிலி ஆண்டவர், நல்லதங்காள், பூரணத்தாள்-பொற்கொடியாள், அய்யப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி கடந்த 6-ந் தேதி காலை முதல் கணபதி ஹோமம், குபேர லட்சுமி ஹோமம், கோபூஜையுடன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மற்றும் வாஸ்து சாந்தி பூஜையும், 8-ந் தேதி காலையில் கல்லணை காவிரி கரையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலையில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. நேற்று காலை யாக பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளும், மாலையில் சூர்ய பூஜை, மண்டப பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்குகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் ஹரி சுப்பிரமணியன், உதவி ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் வித்யா மற்றும் கோவில் திருப்பணிக்குழுவினர், பத்தாளப்பேட்டை கிராம மக்கள் செய்து உள்ளனர்.


Next Story