துர்க்கை காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர் அருகே துர்க்கை காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலம் கிராமத்தில் துர்க்கை காளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர் கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story