சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குறவர் சமூகத்தினர் போராட்டம்


சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குறவர் சமூகத்தினர் போராட்டம்
x

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குறவர் சமூகத்தினர் நேற்று 6-வது நாளில் தூக்கு கயிறுமாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குறவர் சமூகத்தினர் நேற்று 6-வது நாளில் தூக்கு கயிறுமாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு ேபாராட்டம்

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, கிராமம் மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் குறவர் சமூகத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில்நடைபெற்று வரும் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுத்தும், கண்ணை கட்டி தவளை போல் தவழ்ந்து வந்தும் போராட்டங்களை நடத்தி வரும் போராட்டக்காரர்கள் நேற்று 6,வது நாளாக நேற்று தூக்கு கயிறு மாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் நகரச் செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என் திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் கே. எம். சுப்பிரமணியம் உள்பட கட்சியினர் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் போராட்டக்காரர்களிடம் நகர செயலாளர் டி.டி. குமார் பேசியபோது, ''குறவர் சாதி சான்றிதழ் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்டிருந்தால் நாங்கள் அப்போது அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மூலம் அதற்கான நடவடிக்கை எடுத்து வழங்கி இருப்போம்.

உங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இ்வாறு அவர்கள் ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து பரபரப்பு

6-வது நாளாக தாலுகா அலுவலகத்திலேயே தங்கி குறவன் ஜாதி சான்றிதழ் கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது திருப்பத்தூரில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1 More update

Next Story