லட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே லட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள கிளாம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 40-வது ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சியும், 160 பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாள் தோறும் சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி திருவீதி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இதை தொடர்ந்து கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளாம்பாக்கம் ஊராட்சி பெத்தநாயக்கன்பேட்டை கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story