கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல், 13 ஆயிரம் பேர் கைது - ஏ.டி.ஜி.பி. சங்கர் தகவல்


கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல், 13 ஆயிரம் பேர் கைது - ஏ.டி.ஜி.பி. சங்கர் தகவல்
x

போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று ஏ.டி.ஜி.பி. சங்கர் தெரிவித்தார்.

வேலூர்,

போதைப்பொருட்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும் என்று காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் தடுப்புக்குழு அமைத்து அதன் பயன்பாட்டை நாம் தடுக்கலாம் என்று கூறினார். போதைப்பொருட்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு போர் தொடுத்தால் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார்.



Next Story