"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" - எடப்பாடி பழனிசாமி பேட்டி


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கொலை செய்யப்பட்ட சென்னை பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் படத்தை திறந்துவைத்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன" என்று கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூறிய அவர், "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும்" என்று கூறினார்.


Next Story