நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்

விருத்தாசலம்

மதுரை வழக்கறிஞர் சங்க உறுப்பினர் மகாராஜன் என்பவர் தனது வழக்காடிகளுக்காக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும், காவல்துறை அதிகாரி பல்வீரசிங் என்பவர் மீதான போடப்பட்டுள்ள வழக்குகளில் முனைப்புடன் செயல்பட்ட காரணங்களுக்காக அவர்மீது பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்துள்ளனர். இதனை கண்டித்தும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் போடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜராகி, வழக்கு நடத்தி வருகின்ற மதுரை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் ஆகியோரின் வக்கீல் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை பறித்திடும் நோக்கத்தில், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் அனைத்து வக்கீல்களும், பணியை புறக்கணித்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பூமாலை குமாரசாமி தலைமை தாங்கினார். வக்கீல்கள் விஜயகுமார், அருள்குமார், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணை தலைவர் புஷ்பதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன், மாய மணிகண்டன், ரவி, வீரப்பன், ராஜ்மோகன், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர் சங்கரய்யா, செயலாளர் குமரகுரு, ராமானுஜம், அறிவுடை நம்பி, பெண் வழக்கறிஞர்கள் ஜென்னி, இனியவள், காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story