திருவள்ளூரில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


திருவள்ளூரில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x
திருவள்ளூர்

திருவள்ளூர்,

மத்திய அரசு கடந்த 11-08-2023 அன்று பாராளுமன்றத்தில் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் சரத்துகளை முழுமையாக மாற்றி அமைத்து, மொழி சுதந்திரம் உள்ள இந்தியாவில் மேற்படி வழக்கத்தில் உள்ள சட்டங்களை இந்தியில் பாரதிய நியாய ஷன்ஹிதா 2023, ஸபாரதிய நஹ்ரிக் சுரக்ஷா 2023, பாரதிய சக்ஷய அதிநயம் சட்டம் 2003 என மாற்றியமைத்துள்ளது.

இந்த சட்டங்களை தாக்கல் செய்த மத்திய அரசை வன்மையாக கண்டித்தும், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நேற்று காலை முதல் மாலை வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வக்கீல்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story