சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 15 Oct 2023 10:15 PM GMT (Updated: 15 Oct 2023 10:16 PM GMT)

கோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி


நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவின் படி, கோத்தகிரி ஓரசோலை அருகே உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா தலைமை தாங்கி பேசும்போது, வழக்குகளை நேரடியாக கோர்ட்டு முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, அரசின் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுத் தருவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது போன்ற உதவிகளை செய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் சட்ட உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து முதியோர்களிடம் இருந்து 3 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் சட்ட மைய அலுவலர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.



Next Story