அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம்


அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம்
x

நங்கவள்ளி அருகே கல்லறையில் அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சேலம்

மேச்சேரி:

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழுவினர் நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி பிரிவு சாலை அருகில், ஊதிய கோரிக்கைகளுக்காக உயிர் நீத்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர். இடம் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட 22 அரசு டாக்டர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடம் இருந்து நிவாரணம் தரப்பட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

இதற்கு சங்கத்தின் தலைவர் பெருமாள் பிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் தாகிர், பொருளாளர் நளினி, கொரோனாவால் மறைந்த டாக்டர் விவேகானந்தன், மனைவி திவ்யா இவர்களின் 4 வயது மகன் பிருத்திவிராஜ் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story