ஜனவரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ? - விரைவில் அறிவிப்பு


ஜனவரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ? - விரைவில் அறிவிப்பு
x

கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை,

2024 -ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி 7,8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே சட்டப்பேரவை கூட்டமானது ஜனவரி மாதம் 2 வது வாரத்தில் நடத்தப்படுமா? அல்லது பொங்கல் பண்டிகைக்கு பின்னர் நடத்தப்படுமா? என்று முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆண்டின் முதல் கூட்டத் தொடரானது கவர்னரின் உரையுடன் தொடங்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை கவர்னர் முறையாக முடித்து வைக்கவில்லை. மேலும் கவர்னருக்கும் தமிழக அரசிற்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.


Next Story