'சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்' - கவர்னர் ஆர்.என்.ரவி


சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம் - கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 15 Aug 2023 7:11 AM IST (Updated: 15 Aug 2023 10:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

"நாட்டின் 77-வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் விரிவான நல்வாழ்வுக்கு அன்பான நல்வாழ்த்துகள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க நாம் உறுதி ஏற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story