விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர்
தாந்ேதாணிமலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அகரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கரூர், திருச்சி மண்டல செயலாளர் தமிழ் ஆதன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில், வருகிற டிசம்பர் மாதத்தில் திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கரூரில் இருந்து 100 வாகனங்களில் செல்வது, மழைக்காலங்களில் சுங்ககேட்டில் இருந்து கரூர் அரசு கலைக்கல்லூரி வரை சாலைகளில் மழைநீர் தேங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story