விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு தீ வைப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு தீ வைப்பு
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அலுவலகம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இது பற்றி தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் தலைமையில் கட்சியினர் ஒன்று திரண்டு வந்து பார்வையிட்டனர். மேலும் கடலூர் முதுநகர் போலீசாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் 4 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story