விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2023 11:12 PM IST (Updated: 4 Oct 2023 11:12 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடை வீதியில் மாதானத்தில் இருந்து பழைய ஆறு துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில ்கொள்ளிடம் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் பாவரசு, வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் ஆகியோர் பேசினர். கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, மண்டல துணை செயலாளர் காமராசு, மாநில துணை செயலாளர் செல்வராசு மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் 2 மணி நேரம் தொடர்ந்து நடந்ததால் புதுப்பட்டினம் வழியாக தற்காஸ், பழையாறு சுனாமி நகர் மற்றும் பழையாறு துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மடவாமேடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் லாமேக் தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story