தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் தாலுகா கச்சிராயப்பாளையம் பகுதி திடீர்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). சாராயம் விற்ற வழக்கில் இவரை, கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

இவர் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 5 வழக்குகள் உள்ள நிலையில், தொடர்ந்து, இவர் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், அதை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, அவரை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறைஅலுவலர்கள் மூலம், வெங்கடேசனிடம் கச்சிராயப்பாளையம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story