மகளிர் உரிமை தொகைக்காக மது விலை உயர்த்தப்பட்டதா? அமைச்சர் முத்துசாமி பேட்டி


மகளிர் உரிமை தொகைக்காக மது விலை உயர்த்தப்பட்டதா? அமைச்சர் முத்துசாமி பேட்டி
x

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக மது விலை உயர்த்தப்பட்டதா? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார்.

ஈரோடு,

மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது வேறு, டாஸ்மாக் என்பது வேறு. டாஸ்மாக் மதுக்களுக்கு விலை உயர்த்துவது என்பது முன்பே எடுக்கப்பட்ட முடிவு. அதன்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் அனைத்து மது வகைகளுக்கும் விலை உயர்த்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக மதுவிலை உயர்த்தப்பட்டது என்பது தவறாகும். எனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்துடன் மதுவிற்பனையை தொடர்பு படுத்துவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

மேலும் அமைச்சர் முத்துசாமி கூறும்போது, "அத்திக்கடவு -அவினாசி திட்டத்தில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது மீண்டும் முழு மூச்சுடன் பணிகள் தொடங்கி உள்ளன. முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வருவார். தொடக்க விழா எப்போது என்று இன்னும் ஒரு வாரத்தில் சரியான தேதியை அறிவிப்போம்" என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

1 More update

Next Story