மகாவீர் ஜெயந்தியையொட்டி மது விற்றவர் கைது
மகாவீர் ஜெயந்தியையொட்டி மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
மகாவீர் ஜெயந்தியையொட்டி விராலிமலை ஒன்றியம், ஆவூர், மாத்தூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிலர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது மாத்தூர் டாஸ்மாக் கடையின் பின்புறம் வைத்துக்கொண்டு அங்குள்ள மதுபாரில் வேலை செய்யும் இலுப்பூர் தாலுகா, கிளிக்குடியை சேர்ந்த முத்து (வயது 51) என்பவர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த போது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story