கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
x

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம், கொண்டப்பநாயக்கனப்பள்ளி, ஜெகதேவி, தொகரப்பள்ளி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு கிரானைட் கற்கள் ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் கிரானைட் கற்களுக்கு முறையான ஆவணங்கள், அனுமதி உள்ளதா? என கிருஷ்ணகிரி கனிமவளத்துறை உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் பர்கூர், ஜெகதேவி, பாகிமானூர் கூட்ரோடு ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஐகுந்தம் கூட்ரோடு பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் ரூ.1.54 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து பர்கூர், ஜெகதேவி கூட்ரோடு பகுதியில் சென்றபோது கேட்பாரற்று நின்ற லாரியில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் வனத்துறையினர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர்.


Next Story