கூழாங்கற்கள் கடத்திய லாரி டிரைவர் கைது


கூழாங்கற்கள் கடத்திய லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் கூழாங்கற்கள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கள்ளமேடு கிராமத்தில் சட்ட விரோதமாக கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கடலூர் மாவட்டம் பாலக்கொல்லை பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் என்பவர் கூழாற்கற்களை லாரியில் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story