லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்


லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்
x

சிதம்பரம் அருகே லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள எ.புளியங்குடி, கரைமேடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருங்கல், ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பரி லாரி, திரும்பி சென்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதியது. இதில் அடுத்தடுத்து 8 மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இவற்றின் சேத மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கீரப்பாளையம் உதவி பொறியாளர் அருண் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story