லாரி மோதி மின்கம்பம் சேதம்
சங்கராபுரம் அருகே லாரி மோதி மின்கம்பம் சேதம் போக்குவரத்து பாதிப்பு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள மேல் சிறுவள்ளூரில் இருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பவானி சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. தானிப்பாடியை சேர்ந்த சரவணன் என்பவர் லாரியை ஓட்டினார். தேவபாண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது சாலையோர மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அப்போது மின் வினியோகம் இருந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு பொக்லைன் எந்திரம் மூலம் புதிய மின்கம்பத்தை நட்டு மின்சார வினியோகம் செய்தனர். இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.