லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

பெரியகுளத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

பெரியகுளம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேவதானப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 கேரள மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story