லாட்டரி சீட்டு விற்றவர் கைது
உளுந்தூர்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பூவலிங்கம் மகன் பாரி (வயது 45) என்பதும், லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story