லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்


லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:46 PM GMT)

லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் தேனி பங்களாமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 58) என்பவரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 60 லாட்டரி சீட்டுகள், ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story