பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள்... போக்குவரத்துறை எச்சரிக்கை!


பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள்... போக்குவரத்துறை எச்சரிக்கை!
x

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் விதிகளுக்குப் புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஹாரன்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. வாகன சோதனையின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story