மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி கோவை வருகை
மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி கோவை வருகை
கோயம்புத்தூர்
கோவை
கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேசும்போது கூறியதாவது:- கோவை மாநகராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதுபற்றி, தி.மு.க. நிர்வாகிகள் பலர் என்னிடம் பேசி இருக்கின்றனர். பொதுவான பணிகள் அனைத்தும் விரைந்து நடக்க வேண்டும் என்று கவுன்சிலர்களும் தெரிவித்துள்ளனர். பதவிகளில் இல்லாத நிர்வாகிகள் கூட மாநகராட்சிக்கு என்னென்ன தேவை என்று கூறி இருக்கின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். வருகிற 22, 23-ந்தேதிகளில் அவர், கோவை வருகிறார். 24-ந்தேதி திருப்பூர் செல்கிறார். அவர் வரும்போது நடந்து கொண்டிருக்கும் அத்தனை திட்டப்பணிகளையும் செய்து முடித்துவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story