கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்கம்


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்கம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம். மைய திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார். பின்னர் இந்தியன் வங்கி சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வாகனத்தை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்

இது குறித்து கலெக்டர் கூறுகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கி கிளை ஏற்கனவே, திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஒரு புதிய ஏ.டி.எம். மையம் திறந்து வைக்கப்பட்டு, ஏடிஎம்-ல் இருந்து பண பரிவர்த்தனை செய்து வைக்கப்பட்டது என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பூவதி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி, துணை மண்டல மேலாளர் பழனிகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், துணை முதல்வர் சாத்விகா, நிர்வாக அலுவலர் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், கிருஷ்ணகிரி கிளை மேலாளர் கலா, இந்தியன் வங்கி கிளை மேலாளர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story