மதுரை: கார், மோட்டார் சைக்கிள், அரசு பஸ் அடுத்தடுத்து மோதல்... கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே கார், மோட்டார் சைக்கிள், அரசு பஸ் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து அரசு பஸ் ஒன்று மதுரை நோக்கி சென்றது. இந்த பஸ் உசிலம்பட்டி அருகே மதுரைச் சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த. அப்பொழுது மதுரையிலிருந்து வந்த கார் ஒன்று எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ்சின் மீது மோதியது.
அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காரில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக இறங்கிவிட்டனர்.பின்னர், சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சாலை விபத்தில் கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.