காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்க கெடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்க கெடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்க கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த குருநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து பல்வேறு நபர்களை தேர்ந்தெடுத்து கடந்த ஆண்டு டெல்லியில் நேர்முகத்தேர்வும் நடந்தது. இதில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, மத்திய உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதுவரை துணைவேந்தர் நியமனம் செய்யப்படவில்லை. நிரந்தர துணைவேந்தர் இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு துணைவேந்தரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தர் நியமிப்பது குறித்து 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story