மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி
x

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த 11 உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படும்.

அதன்படி நேற்று அனைத்து கோவில்களிலும் உள்ள உண்டியல்களை திறந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதில் 1 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரத்து 573 ரூபாய் ரொக்கம், 415 கிராம் தங்கம், 1143 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த பணியில் அறங்காவலர் குழுவினர், வங்கி பணியாளர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பேரவை அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story