மதுரை நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ்; 8 பேர் கைது


மதுரை நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ்; 8 பேர் கைது
x

மதுரை நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


மதுரை நகர் பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக புதிதாக திறக்கப்பட்ட மதுரை-நத்தம் மேம்பால பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசாரும், அவ்வப்போது நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் வாலிபர்கள் சிலர் நடுரோட்டில் ேமாட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுவதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தல்லாகுளம் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு சில வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. ேமாட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கிருஷ்ணாபுரம்காலனியை சேர்ந்த தரனேஷ் (வயது 20) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரையில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால், ேமாட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடும் நபர்கள் மட்டுமின்றி அமைதியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை வடகரை பகுதியில் அதிவேகமாக ேமாட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட போது அந்த வாலிபர்கள் மோதியதில், எதிர் பகுதியில் வந்த தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். இதுபோல் பல இடங்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே போலீசார் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story