அ.தி.மு.க.வில் இணைந்தார் டாக்டர் சரவணன்...!
பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட தகராறில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பா.ஜ.க.வினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது
தொடர்ந்து, நிதி அமைச்சரை நள்ளிரவில் சந்தித்த சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள சரவணன், 2023 புத்தாண்டு தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் என்னை இணைந்துக் கொண்டேன். வரக்கூடிய காலங்களில் கட்சி வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story