மதுரை வீரன் வரலாறு புத்தக தடை வழக்கு: புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.!
சர்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சர்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
'மதுரை வீரன் உண்மை வரலாறு' எனும் புத்தகம் மீதான தடையை நீக்கக் கோரி எழுத்தாளர் குழந்தை ராயப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகவும் சாதி ரீதியாக எதுவும் இல்லையென்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
'மாதொருபாகன்' வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அந்த குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.