மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்; ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்; ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங்குக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

கிராமப்புற மக்களின் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாள் வேலையை உறுதி செய்யும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு சமீப காலமாக குறைத்துள்ளது.

மேலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த நிதியை விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு மாநில அரசுகள், உடனடியாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலை உள்ளது. இந்த நிலையில் ஊதியத்திற்கான நிதி ரூ.2,697 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story