போத்தனூர் பணிமனையில் பராமரிப்பு பணி: கோவை வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


போத்தனூர் பணிமனையில் பராமரிப்பு பணி: கோவை வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோவை வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை,

தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்: 16159) ஏப்ரல் 27, 29-ந்தேதிகளில் திருச்சி கோட்டை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளத்தின் ஆலப்புழா செல்லும் விரைவு (ரெயில் வண்டி எண்: 13351) ஏப்ரல் 26, 28-ந்தேதிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், நாமக்கல், கருவூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

ஈரோடு-பாலக்காடு நகரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள்: 06818/06819) ஏப்ரல் 28, 30-ந்தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள்: 16721/16722) ஏப்ரல் 28, 30-ந்தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள்: 16721/16722) ஏப்ரல் 28, 30-ந்தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல மதுரை சென்றடையும்.

கண்ணூர்-கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயில் விரைவு ரெயில் (வண்டி எண்கள்: 16608/16607) ஏப்ரல் 28, 30-ந்தேதிகளில் போத்த னூருடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து பிற்பகல் 2.34 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல கண்ணூர் சென்றடையும்.

கேரள மாநிலம் சொரனூர்-கோவை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள் 06804/06805) ஏப்ரல் 28, 30-ந்தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல சொரனூர் சென்றடையும்."

இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story