பராமரிப்பு பணி: சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) 1, 2-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1, 2, 3-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.