மக்காச்சோளம் விலை உயர்வு


மக்காச்சோளம் விலை உயர்வு
x

மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர்கள் நன்கு விளைந்ததும் சோளக் கதிர்களை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் பிரித்து எடுக்கின்றனர்.

பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழிகளுக்கு தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.23-க்கு விற்பனையானது.


Next Story