வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர்.மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.18-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது.

1 More update

Next Story