வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.
கரூர்
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் பறித்து எந்திரத்தின் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் வரத்து குறைவால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.18-க்கு விற்றது, தற்போது 1 கிலோ ரூ.22-க்கு விற்பனையாகிறது.
Related Tags :
Next Story