வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், திருக்காடுதுறை, ஆவுடையார்பாறை, நாயக்கனூர், சோளக்காளிபாளையம், வெங்கம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் விளைந்ததும் பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வரத்து குறைந்ததால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்றது தற்ேபாது ரூ.22 வரை விற்பனையானது.


Next Story