மக்காச்சோளம் மகசூல் அமோகம்; விற்பனை மந்தம்


மக்காச்சோளம் மகசூல் அமோகம்; விற்பனை மந்தம்
x

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் மகசூல் அமோகமாக இருந்தும் விற்பனை மந்தமாக உள்ளது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் மகசூல் அமோகமாக இருந்தும் விற்பனை மந்தமாக உள்ளது.

மக்காச்சோளம் சாகுபடி

ஆலங்குளம் பகுதியில் பாறைபட்டி, கோபாலபுரம், புளியடிபட்டி, கரிசல்குளம், ரெட்டியபட்டி, கீழராஜகுலராமன், கன்னி தேவன்பட்டி, சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், காளவாசல், தொம்ப குளம், கல்லமயாயக்கர்பட்டி, எதிர்கோட்டை, உப்புபட்டி, காக்கிவாடன்பட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், எட்டக்காட்டி, இ.டி.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யபட்டு இருந்தது.

தற்போது இந்த பகுதிகளில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் நன்றாக உள்ளது. அறுவடைக்கு முன்பு வரை குவிண்டால் ரூ.2,500 வரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

விலை இல்லை

தற்போது குவிண்டால் ரூ.2,170-க்கு வாங்கப்படுகிறது. இதுபற்றி பாரைபட்டி விவசாயி பெத்தையா கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக இருக்கிறது. ஆதலால் எதிர்பார்த்த விலை இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவு வருமானம் இல்லாததால் வங்கிகளில் கடன்வாங்கி தான் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் தாங்கள் விளைவித்த சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். மக்காச்சோளம் விற்பனையும் மந்தமாக உள்ளதால் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story