குரூப் 2 தேர்வில் குளறுபடி - காரணம் என்ன ? புதிய தகவல் வெளியீடு


குரூப் 2 தேர்வில் குளறுபடி - காரணம் என்ன ? புதிய தகவல் வெளியீடு
x

கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 20 மாவட்டங்களில் உள்ள பல நகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் விடைத்தாள்கள் மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு தேர்வருக்கும் உரிய பதிவெண்கள் விடைத்தாள்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் அவை மாற்றி மாற்றி வழங்கப்பட்டதால், இந்த குளறுபடி ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில், கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு வெவ்வேறு மையங்களுக்கு அனுப்பப்பட்டதே, இந்த குளறுபடிக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வினாத்தாள் அச்சிட டெண்டர் எடுத்த நிறுவனம், நேரடியாக இந்த பணிகளை மேற்கொள்ளாமல் வேறு நிறுவனங்களுக்கு பணிகளை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story