டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது
சங்கராபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தன் மகன் கலியமூர்த்தி (வயது 48) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த சங்கராபுரம் பூட்டை ரோட்டை சேர்ந்த அபு (34) என்பவர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு கலியமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அபு, கலியமூர்த்தியை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கலியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story