சுங்குவார்சத்திரம் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது


சுங்குவார்சத்திரம் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
x

சுங்குவார்சத்திரம் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சிலைகள், விநாயகர் சிலை உள்பட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே தூக்கி வீசி இருந்தனர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து சாமி சிலைகளை சேதபடுத்திய மர்ம நபரை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில் சாமி சிலைகளை சேதப்படுத்தியது எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி (வயது 40). இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. இவர் குடி போதையில் சாமி சிலைகளை சேதப்படுத்தியது தெரிய வந்தது. போலீசார் துளசியை கைது செய்தனர்.


Next Story