வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த நபர் கைது
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே, வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது அன்வர் அலி என்பவர், பண்ருட்டியை சேர்ந்த முருகன் உட்பட 14 பேரை, அர்மேனியா நாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களிடம் இருந்து 28 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
ஆனால் கூறியபடி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். விசாரணையை தொடர்ந்து அன்வர் அலியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story